கல்யாணம் கட்டிக்கிட்டவங்க மறுபடியும் 60 -வது வருஷத்தில் ஷஷ்டியப்த பூர்த்தின்னு அறுபதாம் கல்யாணம் கட்டிக்கிறபோது ஏற்படுகிற சந்தோசம் இருக்கே கொடுத்து வச்சிருக்கணும்.
அது மாதிரிதாங்க இதுவும்.!
சரத்குமார்- ராதிகா இருவரும் கணவன் மனைவி. இருவருக்கும் தோளுக்கு வளர்ந்திட்ட பிள்ளை. இந்த நிலையில் இருவரும் கணவன் மனைவியாகவே ஒரு படத்தில் நடிச்சா எப்படி இருக்கும்?
நல்ல ஐடியா!
அது வரவேண்டிய ஆளுக்கு வந்தது. அவர்தான் மணிரத்னம்.
அவரது மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் ‘வானம் கொட்டட்டும்’என்கிற பெயரில் படம் எடுக்கிறார்கள். மணிரத்னத்தின் துணை இயக்குநர் தனசேகரன்தான் இயக்குகிறார்.
சரத் -ராதிகாவின் பிள்ளைகளாக விக்ரம் பிரபு,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.