தேர்தல் முடிவுகளை கவனமாக ஆராய்ந்து வந்த ரஜினிகாந்த் தனது நிர்வாகிகளை அவசரமாக அழைத்து ஆலோசனை நடத்தினார். உடனடியாக கட்சியை ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை.
தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியின் படுதோல்வி, பாஜகவின் தோல்விக்கு காரணம் என்ன ,கமலில் மக்கள் நீதி மையம் வாங்கிய வாக்குகள் எண்ணிக்கை இன்னும் பல பிரச்னைகளை நிர்வாகிகள்,வழியாக கேட்டறிந்தார்.
குறிப்பாக பாமக,தேமுதிகவின் வீழ்ச்சிக்கு என்ன காரணமாக இருக்கும் என்பது பற்றியும் கேட்டறிந்தாராம். முடிவில் மோடிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
“மரியாதைக்குரிய மோடிஜி! நெஞ்சார்ந்த வாழ்த்துகள். சாதித்திருக்கிறீர்கள்.கடவுளின் ஆசி கிடைக்கட்டும்”