தமிழ்நாட்டில் முக்கியமான தொகுதிகளில் தூத்துக்குடியும் ஒன்று..பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவியான தமிழிசை சவுந்திரராஜன் நம்பிக்கையுடன் நின்ற தொகுதி. தனது சமுதாய மக்கள் அதிகமாக வாழ்வதால் நம்பிக்கையுடன் நின்றார்.ஆனால் குற்றப் பரம்பரை பற்றிய இவரது பேச்சு தொகுதியில் குறிப்பிட்ட சமுதாய மக்களை புண்படுத்தியது.
கலைஞரின் மகள் கனிமொழி அங்கு திமுக சார்பில் நின்றதும் தொகுதியின் நிலவரம் மாறியது. திமுகவின் தொண்டர்கள் கலைஞரின் மகளை வெற்றி பெற வைக்க வேண்டும் என்கிற முனைப்புடன் செயல் பட்டு வெற்றி பெற வைத்து இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான வாக்குகள் முன்னிலை பெற்று தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.மாலையில் வெற்றி அறிவிப்பு வெளியாகிவிடும் என்று சொல்கிறார்கள்.
பாஜகவின் தோல்வியினால் தமிழகத்தின் தலைமைப் பகுதியில் இருந்து தமிழிசை நீக்கப்படலாம் என தெரிகிறது.