இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்தில் தலைமை தளகர்த்தர் என்றால் அது எஸ்.பி,பாலசுப்ரமணியம்தான்..!
ராகதேவனின் மெட்டுகளுக்கு ஜீவன் கொடுத்தவர் பாலு.
இருவரும் ராயல்டி என்கிற உரிமைப்போரில் எதிரெதிர் நின்று “நீ எனது பாடல்களைப்பாட வேண்டுமானால் ராயல்டி கொடு” என ராஜா கேட்க” போ..முடியாது, உனது பாடல்களை நான் பாடப்போவதில்லை”என பாலு பதில் கொடுக்க அதன் பின்னர் இருவரும் ஒரு ஹலோ கூட சொல்லிக்கொள்வதில்லை. அன்புச்சண்டையில் அன்னக்கிளி மாமரத்தில் ஒதுங்கி விட்டது. இளைய நிலா கார் மேகத்தில் மறைந்து கொண்டது.
இந்த நிலைமை ஞானியின் பிறந்த நாளான ஜூன் 2-ம் தேதி மாறப்போகிறது.ஆம் இருவரும் மீண்டும் இணைகிறார்கள்.
சென்னையில் மாபெரும் இசை விழா நடக்கிறது.
அந்த விழாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ,உஷா உதுப் ,இன்னும் பல இசைக்கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள். இளையராஜாவின் நண்பரான கமல்ஹாசனும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கிறார்கள்.