மல்யுத்தப் போட்டியில் மண்ணைக்கவ்விய பயில்வானைப் பற்றி நோஞ்சான்கள் நையாண்டி பண்ணுவது மாதிரிதான் இதுவும் என்று சொல்லி விடலாமா?
காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி பற்றி பலவிதமான கமெண்ட்ஸ்.!
இருந்தாலும் சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்று வனவாசம் போனாலும் “பகவானின் ” சப்போர்ட் தர்மன் பிரதர்சுக்குத்தானே இருந்தது என காங்கிரஸ் தரப்பில் சொல்கிறார்கள்.
வெற்றி விழா படங்களை மட்டுமே கொடுத்து வருகிற நடிகர் சித்தார்த் தனது கருத்துகளை சொல்லி இருக்கிறார்.
- டெல்லி டேர்டெவில்ஸ் அணி தங்கள் பெயரை மாற்றிக்கொண்டதைப் போல காங்கிரஸ் கட்சியும் பெயர் மாற்றுவது பற்றி யோசிக்க வேண்டும்.
- திறனில்லாத தலைவர் தலைமையில் அதிக தோல்விகள்.
- கட்சியில் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகமான லட்சியங்கள்.
- சுதந்திர இந்தியாவின் மூத்த கட்சி கவலைக்கிடம்.
மேற்கண்டவாறு சித்தார்த் சொல்லியிருக்கிறார்.