ஸ்வரபாஸ்கர்.. பாலிவுட் நடிகை. சோசியல் நெட்வொர்க்கில் காசு வாங்காமல் அதிரடியான கருத்துகளை சொல்லக் கூடியவர்..
அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் நின்ற பிரக்யா தாக்கூர் என்கிற வெடிகுண்டு வழக்கு அக்யூஸ்டு வெற்றி பெற்றது பற்றி கமென்ட் அடித்திருந்தார்.
அந்த பிரக்யா காவி உடை அணிந்திருப்பார். தனது இரு மார்பகங்களையும் புற்று நோய் காரணமாக அறுவைச் சிகிச்சை வழியாக அகற்றியவர். ஆனால் மாட்டு மூத்திரம் குடித்ததினால் புற்று நோய் குணமாகியதாக சொல்கிறார். அவர் மீது வெடி குண்டு வழக்கு இருக்கிறது.
இருந்தாலும் பாஜக அவரை தனது வேட்பாளராக போபாலில் களம் இறக்கியது. அவரும் வெற்றி பெற்றுவிட்டார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றாகிவிட்ட பிறகு கோர்ட்டு என்ன சொல்லி என்ன ஆகப்போகிறது.