- பூ உறங்குது பொழுதும் உறங்குது
- நீ உறங்கவில்லை -நிலவே
- கானுறங்குது காற்றும் உறங்குது
- நானுறங்கவில்லை!
- மான் உறங்குது மயிலும் உறங்குது
- மனம் உறங்கவில்லை-என்
- வழியுறங்குது மொழியும் உறங்குது
- விழியுறங்கவில்லை…..
- தென்றலிலே எனது உடல் தேய்ந்தது பாதி–அது
- தின்றதேல்லாம் போக இங்கே இருப்பது மீதி–
கவியரசர் கண்ணதாசனின் காதல் பாடல்களில் இதுவும் ஒன்று.
காதலனை நினைத்து கசிந்துருகி பாடுகிற பாடல்.
காதலுக்கு -காதலிக்கு காதலன் அடிமையாகிவிட்டால் அவனும் இப்படித்தான் கசிந்து மருகுவான். காதலில் தோல்வி அடைந்தால் அவனது இதயம் லப் டப் என அடிக்காது. சம்மட்டியால் வாங்குவதைப் போல டங் டங் என கதறும்.
அத்தகைய அடிகள் வாங்கியவர்தான் எஸ்.டி.ஆர்.என்கிற சிலம்பரசன்.
அவருக்கு இன்னமும் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எதுவும் முடிவாகவில்லை. ஆனால் கூல் சுரேஷ் என்பவர் “சிம்புவுக்கு பெண் பார்த்துவிட்டார்கள். இது தனக்குத் தெரியும்” என்று பேசியதை வைத்துக் கொண்டு பல வித வதந்திகள் பறக்கத் தொடங்கிஇருக்கின்றன. இதன் விளைவுகள் கூல் சுரேசை ரொம்பவே பாதித்து தற்போது வாயைத் திறப்பதாக இல்லை.
அதாவது சிம்புவை சுற்றி இருப்பவர்களே வதந்திகளுக்குக் காரணமாக இருக்கிறார்கள் ,சிலரைத் தவிர!
அவரது காதல் வாழ்க்கை அவருக்கு ராசி இல்லையோ என்னவோ…!
“தாளத்தில் ஆசை உண்டு,
இசைப்பது உந்தன் கண்கள்
நடிப்பது எந்தன் கண்கள்,
இணைப்பது காதலன்றோ!”
காதலன் பாடுகிற பாடல் இது:
காதலுக்கு உண்மையாக வாழ்ந்த சிம்புவின் காதலை துண்டித்துக் கொண்டது அவரது தோழிகளே என்பதை மட்டும் சொல்லிவிட்டு தொடர விரும்புகிறேன்.
ஒரு நிகழ்வு எனக்கு நினைவுக்கு வருகிறது.
அந்தக் கிளி அதிசய வண்ணக்கிளி. லட்சம் ரூபாய் பெறும்!வெளிநாட்டில் இருந்து ஆசை ஆசையாய் வாங்கி வந்தார்.
காதலியின் பிறந்த நாள் வருகிறது.அவளுக்கு அந்த அதிசயக்கிளியை கொடுத்து ஆச்சரியப்படுத்த வேண்டும் என்கிற ஆசை நெஞ்சு நிறைய!
காதலிக்கு பரிசுகள் என்பது கைக்குட்டையில் தொடங்கி ‘பிரா’வில் வளர்ந்து பின்னர் தங்க ஆபரணம் வரை நீளும் என்பது பொதுவான விதி அல்லது முறை.. வசதி படைத்தவர்கள் கார் வழங்கி ஆசையாய் அழைத்துச் செல்வார்கள். தனி விமானத்தில் தாஜ்மகாலுக்கு திரிஷாவை அழைத்துச் சென்றவரும் கணவராக வேண்டிய கட்டம் வரை சென்றவர்தானே!
இவர் வழங்க நினைத்தது அதிசயக்கிளி.
கொஞ்சி விளையாடட்டும் தன்னை நினைத்துக் கொள்ளட்டும் என வாங்கி வந்த அந்த கிளியுடன் மும்பை பறந்தார்.
காதலன்-காதலி மனநிலையை பொதுவாக தாய்க்கிழவிகள் புரிந்து கொள்வதில்லை. தாங்களும் அந்த பருவத்தைக் கடந்து வந்தவர்கள்தான் என்பதை மறந்து ஆதிக்க மனப்பான்மைக்கு வந்து விடுவார்கள்.
அன்று அதுதான் நடந்தது.
காதலனின் பரிசைப்பார்த்ததும் காதலிக்கு பரவசம்.ஆசையுடன் கிளையை வாங்கினாள் காதலி!
மாதாஜி முகத்தில் ரவுத்திரம்.
“எங்களால் வளர்க்கமுடியாது.பறக்க விட்ருவோம்” என சொல்லியிருக்கிறார்.
காதலன் காதலி இருவருமே அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டார்கள்.
மாதாஜி அன்று வாய் விட்டது பின்னர் பலித்தே விட்டது.!
ஆம்.அந்த இளம் ஜோடியின் காதல் முறிந்து விட்டது.
நடிகையின் திரை உலக வாழ்க்கையும் கேள்விக் குறியாகவே இருக்கிறது.
ஆக காதல் முறிவதற்கு அவர்களை சார்ந்தவர்களே காரணமாக இருக்கிறார்கள்.
சினிமாவைச் சார்ந்த குடும்பங்களில் பிரிவுகள் ஓசையின்றி முடிந்து விடுகின்றன.
காதல் மன்னன் என்றால் முதலில் நினைவுக்கு வருகிறவர் அமரர் ஜெமினி கணேசன் தான்!
தன்னைக் காதலித்த மகராசிகளை மனம் கோணாமல் தாலி கட்டி மனைவிகளாக ஏற்றுக் கொண்டார்.
அவரின் மனைவிகளில் சாவித்திரியும் ஒருவர்.
ஜெமினி -சாவித்திரி குடும்பத்தைச்சேர்ந்த ஒருவர் உச்ச நடிகரின் குடும்பத்துப் பெண்ணைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 13 வயதில் மகன் இருக்கிறார்.
என்ன நடந்ததோ தற்போது அருணும் மதுவந்தியும் தனித்தனி!
ஆம் மதுவந்தி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள்.
இன்னும் இரண்டு நாளில் சந்திக்கலாம்.
–தேவிமணி.