அரண்மனை படத்தின் மிக பெரிய வெற்றிக்கு பின்பு இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகிக்கொண்டு இருக்கும் திரைப்படம் அரண்மனை 2. இந்த படத்தில் சித்தார்த் , த்ரிஷா , ஹன்சிகா , பூணம் பாஜ்வா , சூரி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரமேற்று நடித்துள்ளனர். படத்துக்கு இசை ஹிப் ஹாப் தமிழா ஆதி. அவினி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பில் குஷ்பூ சுந்தர் இப்படத்தை தயாரித்துள்ளார்.
அரண்மனை 2 படத்தின் கிளைமாக்ஸ் பாடல் காட்சிக்காக 103 அடி உயர பிரம்மாண்ட அம்மன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டு அதன் முன் ஏராளமான நடன கலைஞர்கள் மற்றும் ஜூனியர் ஆர்டிஸ்ட்களை கொண்டு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பாடலுக்காக உருவாக்கப்பட்டுள்ள அம்மன் சிலையானது ஆசியாவிலேயே மிக பெரிய அம்மன் சிலை என்றும். இதை போன்ற 103 அடி உயர அம்மன் சிலை வேறு எங்கும் கிடையாது என்று படக்குழுவினர் கூறினார். இந்த அம்மன் சிலை லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸ் என்னும் உலக சாதனை முயற்சிகள் இடம் பெறும் புத்தகத்தில் இடம் பெறவுள்ளது என்பது குறிப்பிடதக்கது. பிரம்மாண்டமான அம்மன் சிலையை உ.ருவாக்கியவர் கலை இயக்குநர் குருராஜ்.