“புதிய உறவுகளுடன் அதிக நேயத்துடன் எனது குடும்ப புகைப்படம் பெரிய அளவில் வலம் வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது என் இளைய சகோதரர், சகோதரி குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டது என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது.
என்னைப் பற்றியும் என் திரையுலக வாழ்க்கை பற்றியும் நிறைய யூகங்களும், வதந்திகளும் குறிப்பாக என் திருமணம் குறித்த சில வதந்திகளும் என் காதுகளுக்கு வருகிறது.
நான் தெளிவாகவே கூறுகிறேன் அந்த மாதிரி திட்டங்கள் எதுவும் இப்போதைக்கு இல்லை. இது குறித்து ஏதேனும் முடிவும், சம்மதமும் இருந்தால் அதனை நான் தகுந்த நேரத்தில், தகுந்த வழிமுறை வாயிலாக தெரிவிப்பேன்.
என் திரையுலக வாழ்க்கை ரீதியாகவும் சில பல பெண்களுடன் தொடர்பு படுத்தி நிறைய வதந்திகள் வருவது அறிகிறேன் ஒரு நடிகராக சிலபல வலியுறுத்தும் சூழ்நிலைகளின் அழுத்தத்தில் சில தயாரிப்பாளர்களை இயல்பாகவே சந்திக்கும் அவசியம் ஏற்பட்டது.
ஆனால், நான் பட வாய்ப்புக்காக தான் பார்த்தேன் என்று பொருளல்ல .இந்த சந்திப்புகளை எல்லாம் எதிர்கால படங்கள் என்ற வதந்திகள் பெரிய அளவில் பரவி, ஏதோ உண்மையிலேயே அறிவிக்கப்பட்ட படங்களின் செய்தியாகவே வெளியாகிறது.
இது மாதிரியான கேள்விப்பட்டதை எல்லாம் செய்தியாக நம்புவது, தவறான வழிகாட்டுதலுக்கு இட்டுச் செல்கிறது. ஆனால் வதந்திகளை உண்மை என நம்பி, அது நடக்காமல் போகும் போது ரசிகர்கள், அதிருப்தியும் ஏமாற்றமும் அடைகின்றனர்.
ஆகவே அப்படிப்பட்ட படங்களில் ஏதாவது நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன் என்றால் அதை சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் முறையாக அறிவிக்கும் என்பதை, ஒரு நடிகராக இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்