சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த வருடம் வீரம் திரைப்படத்தில் நடித்த அஜீத் தற்போது மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் சமந்தா,லக்ச்மிமேனன் ஆகியோருடன் நடித்து வந்த பெயரிடப்படாத படத்திற்கு தற்போது வேதாளம் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று இரவு வெளியானது. இந்நிலையில்,வீரம், வேதாளம் என 2 படங்களிலும் சிறுத்தை சிவாவின் இயக்கம் மற்றும் கதை ஆகியவை அஜீத்தை மிகவும் கவர்ந்து விட்டதாகவும், அதனால் மீண்டும் ஒரு புதிய படத்தில் நாம் மீண்டும் இணையலாம் என்று அஜீத்,சிறுத்தை சிவாவிடம் கூறியதாகாவும் தெரிகிறது.