மிரட்டப்பட்ட நடிகையின் பெயர் ரித்து சிங்.
இவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பக்கத்திலயே கடந்த பத்து நாளாக ஷூட்டிங் நடந்திருக்கிறது.
தொடர்ந்து ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்த வாலிபருக்கு நடிகை மீது ஆசை வந்து விட்டது..
“மணந்தால் மகாதேவி .இல்லாவிட்டால் மரணதேவி “என்கிற நோக்கத்துடன் பிஸ்டலுடன் ஒருநாள் வந்து விட்டான்.அசந்த நேரமாக பார்த்து ரித்து சிங்கை பிஸ்டல் முனையில் மடக்கி விட்டான். ஷூட்டிங் ஏரியாவே என்ன செய்வதென தெரியாமல் போலீசுக்கு போன் செய்ய அவர்களும் படையுடன் வந்து விட்டார்கள்.
“உனக்கு என்னய்யா வேணும்?”என்றபடியே அந்த வாலிபரை நோக்கி நடக்க “கிட்ட வராதே சுட்டுவிடுவேன்” என்று வாலிபர் எச்சரித்திருக்கிறான்.
ஆனால் சாமர்த்தியமாக நடப்பதாக நினைத்து மேலும் நெருங்க அந்த ஆளு சுட்டே விட்டான்.
தூக்கிக்கிக் கொண்டு ஓடு ஆஸ்பத்திரிக்கு!
சுற்றி வளைக்கவே அந்த ஆளுக்கு உதறல். அவனை போலீஸ் சுட்டு விடும் என்கிற பயம் வந்துவிட்டது. நடிகையின் மீது வைத்த குறியை தளர்த்தவே மடக்கிவிட்டது போலீஸ்.
“ஏண்டா இப்படி பண்ணே?”
“கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை!” என்றான் அந்த கோமாளி.பங்கஜ்.
போலீஸ் கைது பண்ணிக்கொண்டு போய்விட்டது.
இது நடந்தது உத்தரபிரதேசத்தில். நடிகை போஜ்புரி பட நாயகி.