படத்தைப் பார்த்தால் ‘கவிப் பூங்கொத்து’வின் வரிகள் நினைவிலாடின.
- “வட்டத்துக்கு தொடக்கமுமில்லை
- வளைந்து சுற்றிச் சென்றாலும்
- வந்து முடிகிறது அதேபுள்ளியில்
- வாழ்க்கையும் அப்படித்தான்
காதலுக்கும் இது பொருந்துமா? பொருந்தாது. ஆகவே எஸ்.டி.ஆர் –ஹன்சிகா காதல் மீண்டும் தொடர வாய்ப்பில்லை.
ஆனால் உதவும் மனம் அதிக கனம் எஸ்.டி.ஆரிடம்!
ஹன்சிகாவின் ஐம்பதாவது படம் என்பதால் ஒரு ‘காமியோ’ ரோலில் நடிக்க இசைந்து நடித்துக் கொண்டிருக்கிறார் .அதனுடைய படம்தான் மேலே உள்ளது. சிம்பு வந்ததும் அன்புடன் அரவணைத்து வரவேற்றிருக்கிறார் முன்னாள் காதலி.!
மஹா என்பது படத்தின் பெயர். நாயகியை முன்னிறுத்தும் இந்த படத்தை எழுதி இயக்குபவர் ஜமீல். ஸ்ரீகாந்த், நாசர், தம்பிராமையா,சாயாசிங் ஆகியோர் நடித்து வரும் இந்த படத்தை தயாரிப்பவர் மதியழகன்.