யாருக்குத்தான் கோபம் வராது?
இதற்கு முன் உன் மனைவி இவர்களுடன் கொஞ்சிக் குலாவியவள்தான் என படம் போட்டு அதற்கு மீம் என பெயரிட்டு மழுப்பினாலும் ஆத்திரம் வருமா வராதா?
நடிகையின் வாழ்க்கையில் பலருடன் நெருங்கிப் பழகாமல் வாழ முடியாது. அது காலம் காலமாக இருந்துவரும் வழக்கம். அப்படி நடித்தால்தான் இருவருக்கும் சூப்பர் கெமிஸ்ட்ரி என விமர்சகர்களே பாராட்டுவார்கள்.
ஆனால் வேண்டும் என்றே ஐஸ்வர்யா பச்சனை கடுப்பேற்றவேண்டும் என்பதற்காக மோடியாக நடித்திருக்கும் விவேக் ஓபராய் ஒரு மீமை கிரியேட் பண்ணினார்..
சல்மான்கானிடம் இது பற்றி கேட்க அவரோ “சீச்சி மட்டமான செயல் “என்று சொல்லி விட்டார்.
கேன்ஸ் படவிழாவில் இருந்த ஐஸ்வர்யா,அபிசேக் பச்சன் இருவருக்கும் தாமதமாகத்தான் தெரித்தது. அபிசேக் பச்சனுக்கு கடுங்கோபம் ! பயங்கரமாக ரீஆக்ட் பண்ண பார்த்தார்.
“வேண்டாம் கோபம்! அப்படியே விட்டு விடுங்கள்”
கணவனை அடக்கி வைத்து விட்டார் ஐஸ்வரியராய்.