ரஜினி காந்த் இன்று மதியம் போயஸ் காரட்னில் உள்ள வீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
“
எதிர்க்கட்சிகளின் வலுவான பிரச்சாரம் தான் அண்ணா திமுக கூட்டணியின் தோல்விக்கு காரணம் .
கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் வரவேற்கத்தக்கது
தமிழகத்தில் பிஜேபி படுதோல்வி அடைந்தது என்பது தான் நிஜம்.
![](https://cinemamurasam.com/wp-content/uploads/2019/05/IMG-20190528-WA0022.jpg)
இந்திராகாந்தி ராஜீவ்காந்தியை அடுத்து மக்களை கவர்ந்த தலைவர்களின் மோடியும் ஒருவர்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது இல்லை அதுவே அவர்களின் தேர்தல் தோல்விக்கு காரணம் ஆகிவிட்டது .
தமிழகத்தில் மோடிக்கு எதிர்ப்பு அலை வீசுவது உண்மைதான் . மக்களவை தேர்தலில் மோடி என்ற தனி மனிதனுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி பதவி விலகத் தேவையில்லை.
தற்போது எதிர்க் கட்சிகளின் செயல்பாடு மிக முக்கியமானது .தமிழகத்தில் தற்போது மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது .மோடி பதவியேற்பு விழாவில் நான் கலந்து கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.