என்னடா இது கோலிவுட்டில் இன்னமும் குழப்படி ஆரம்பமாகவில்லை.அக்கினி நட்சத்திரமும் விடைபெறுகிறதே என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஆறுதலான செய்தி.!
ஆரம்பமாகி விட்டது தியேட்டர் அதிபர்களின் அதிரடி !
தியேட்டர் அதிபர்களும் விநியோகஸ்தர்களும் பணத்தை எப்படி பங்கு போடுவது என்பது பற்றி தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர் புதிய கொள்கையை வகுத்திருக்கிறார்கள்.
எந்தெந்த நடிகர்களின் படங்களின் வசூலை எப்படி பங்கு பிரிப்பது என்பது பற்றி அவர்கள் தரம் பிரித்து வைத்திருக்கிறார்கள். சிலரின் பெயர் பட்டியலில் இல்லை.
இனி விவரத்தைப் பார்ப்போம்.
முதல் வார வசூலில் ரஜினி, அஜித், விஜய் படம் என்றால் 60%ம், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் படம் என்றால் 55%ம், மற்ற நடிகர்கள் படம் என்றால் 50%ம் விநியோகிஸ்தர்களுக்கு வழங்கப்படும் .
இந்த தொகை ஏ சென்டருக்கு மட்டுமே!
பி,சி சென்டருக்கு இதில் இருந்து 5% அதிகமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற நடிகர்களுக்கு அனைத்து சென்டருக்கு 50% வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இரண்டாவது வார வசூலில் முதல் வாரம் தரும் சதவிகிதத்தில் இருந்து 5% குறைவாக விநியோகிஸ்தர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் சுப்பிரமணியம் இப்போதுதானே அறிக்கை வாசித்திருக்கிறார். இனிமேல் விநியோகஸ்தர்கள் கூடி அறிக்கை வாசிப்பார்கள்.
ஆனாலும் சங்கம் ஸ்டிராங்.சென்னையில் உள்ள முக்கியமான தியேட்டரை மதுரை அன்பு வாங்கி இருக்கிறார் என்கிறார்கள்.