வருகிற 31 -ம் தேதி தமிழா மக்களுக்கு ,குறிப்பாக அண்ணா சூர்யாவின் ரசிகர்களுக்கு திருவிழாதான்!
இரண்டு வருடங்களாக அவர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த “என்.ஜி.கே”படம் ரிலீஸ் ஆகிறது. செல்வராகவன் இயக்கி இருக்கிற படம். சாய் பல்லவி, ரகுல் பிரித் சிங் என இரண்டு அழகிய பூ பல்லக்குகள் ரொமான்ஸ் பண்ணியிருக்கிற படம். இருவரில் அண்ணா சூரியாவுக்கு எவர் சரியான ஜோடி என்பதையும் தீர்மானிக்கிற படம்.
இந்த என்.ஜி.கே பற்றி அண்ணா சூரியா என்ன சொல்கிறார்?
“இது அரசியல் படம்தான்! ஆனால் அதன் அடித்தளமான வேர் விழுதுகளை அலசுகிற படமாக இருக்கும்.
அரசியல்வாதிகள் அரசாங்கம் செய்கிற தவறுகளை காட்டுவதை விட்டு விட்டு இளைஞர்கள் நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட்டால் என்ன நடக்கும் ,அரசியல்வாதிகளில் தவறுகளை களைவது முக்கிய நோக்கமாக இருக்கும்.
கடந்த இரண்டு வருடங்களாக மொத்த யூனிட்டும் கடுமையாக வேலை செய்திருக்கிறோம்.
சாய் பல்லவி,ரகுல் பிரீத் சிங் இருவரும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
நமது மக்கள் தொகையில் 2.5%விகித மக்கள்தான் தேர்தல் அறிக்கைகளைப் படிக்கிறார்கள்.இந்த நிலை மாற வேண்டும்”என்கிறார் சூரியா.