என்.ஜி.கே.பிரபலங்கள் அந்த படத்தின் இயக்குநர் செல்வ ராகவனை புகழ்ந்து தள்ளிவிட்டார்கள்.
சூர்யாண்ணா சொல்லும்போது “நான் செல்வாவின் பரம ரசிகன். அவருடைய படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக பதினெட்டு வருஷங்கள் காத்திருந்தேன். என்னுடைய லைப்பில் அவருக்கு முக்கிய இடம் உண்டு.அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன் “என்றார்.
“வானதி போன்ற கேரக்டரை என்னால் செய்யமுடியும் என்று டைரக்டர் செல்வா சார் நம்பியதற்காக முதலில் அவருக்கு எனது நன்றியை சொல்லணும். பக்கத்து வீட்டுப்பொண்ணு மாதிரியான ,பப்பிலி பெண்ணாகவே பார்த்தவர்களுக்கு என்.ஜி.கே.வில் வித்தியாசமான ரகுல் பிரீத்தை பார்ப்பார்கள்” என்கிறார் ரகுல் பிரீத்.
சாய் பல்லவியின் அனுபவம் வேற மாதிரி!
“இத பாரு…செல்வராகவன் சார் பெர்பெக்ஸனிஸ்ட் பார்க்கிறவர். அதனால வெட்டியா போனில் பேசுறதை விட்டுட்டு நடிப்பில கவனம் செலுத்துன்னு எனக்கு நிறைய அட்வைஸ்கள். அவங்க சொன்னதெல்லாம் உண்மை. நான் நிறைய தெரிஞ்சிக்கிட்டேன்.அதெல்லாம் எனக்கு மத்த படங்களுக்கு உதவியாக இருக்கும் என்கிறார் ரோஸ் கன்னத்து சாய் பல்லவி.