ரொம்ப காலத்துக்கு முன்னாடி…!
புரட்சி கலைஞர் சரத்குமாரின் கொடி பறந்த காலம்.
இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாருடன் இணைந்து பணியாற்றியவர் ஈரோடு சவுந்தர். கதை வசனம் எழுதி வந்தார்,
பின்னர் சீதனம்,சிம்மராசி என படங்களை இயக்கினார். இதன் பின்னர் சொந்த ஊருக்குப் போய்விட்டார் போலும்.
கோலிவுட் பக்கமாகப் பார்க்க முடியவில்லை.
“ஐயா ,உள்ளேன் ஐயா ” என்று தற்போது வந்திருக்கிறார்.
அவர் தயாரித்து இயக்கும் படத்தின் பெயரும் அதேதான்.
படத்தின் நாயகன் அவரது பேரன் அபிலேஷ்.
வில்லனாக தன்னுடைய தம்பி மகன் பால.சபரீஷன்
கதாநாயகி பிரார்த்தனா,மலையாள நடிகை.