‘மிஸ்டர் லோக்கல்’எதிர்பார்த்த அளவுக்கு மக்களைக் கவரவில்லை. சிவகார்த்திகேயனுக்கு சறுக்கல் என்றெல்லாம் பேசப்பட்டன.
ஆனால் அவருக்கு இன்றும் ஸ்டெடியான வியாபாரம், மார்க்கெட் இருக்கிறது.
இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்,பாண்டிராஜ்,பி.எஸ்.மித்ரன் ஆகியோரின் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இயக்குநர் விக்னேஷ் சிவனும் தன்னுடைய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார்,
இந்த நிலையில் விஜய்யை வைத்து அட்லி இயக்கத்தில் படம் தயாரித்து வருகிற ஏ.சி.எஸ். நிறுவனம் தனது அடுத்த பிரமாண்ட தயாரிப்புக்கு சிவாவை அணுகியிருக்கிறது.