இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளை வருகிற 2 -ம் தேதி சென்னையில் கொண்டாடுகிறார்கள்.
அது தொடர்பாக இன்று மாலை 6.40 மணியளவில் பிரசாத் படப்பிடிப்பு வளாகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் இளையராஜா.
யாரும் கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் என முன்னதாகவே அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் இளையராஜா வந்ததும் நேரடியாகவே பேச்சைத் தொடங்கி விட்டார்.
தென்னிந்திய இசை அமைப்பாளர்கள் அமைப்புக்கு வருகிற 2-ம் தேதியன்று நடக்கும் இசை நிகழ்ச்சி வழியாக உதவிகள் எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால் இந்த நிகழ்ச்சி திரட்டப்படும் பணம் வரவுக்கும் செலவுக்கும் சரியாகிவிடும்.அதனால் எனது சொந்தப் பணத்தில் இருந்து உதவி செய்ய முடிவு செய்திருக்கிறேன்.
பாடகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லைஎன்றால் அது அவர்களது சொந்த முடிவாக இருக்கும் ஊதியம் போதாத காரணமாகவும் இருக்கலாம்” என்றார் இசைஞானி.