நடிகர் சசிகுமார் கெத்தாக நடந்து வந்து காலரைத் தூக்கிவிட்டு நடித்த கிராமத்து படங்கள் இன்றளவும் அவருக்கான ரசிகர் பேட்டயை அப்படியே வைத்திருக்கிறது.
கிராமத்து நாயகன் என்பதைத் தாண்டி அவர் பல படங்களில் தனது தடங்களை அற்புதமாக பதித்து வருகிறார்.
மேலும் சிறப்பான இடத்தைப் பிடிக்கும் படமாக ஒரு புதிய படம் உருவாக இருக்கிறது.
நான் அவனில்லை, அஞ்சாதே, பாண்டி, வன்மம், மாப்பிள்ளை, டிக் டிக் டிக் உள்பட பதிமூன்று படங்களைத் தயாரித்த நெமிச்சந்த் ஜெபக் நிறுவனம் சார்பாக ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் சசிகுமார் நடிக்கிறார்.
இப்படத்தில் சசிகுமாருடன் ஜோக்கர் படத்தின் நாயகன் குருசோமசுந்தரம் நடிக்கிறார். கதாநாயகியாக மானஷா ராதா கிருஷ்ணன் நடிக்கிறார்.
மலையாளத்தில் காலேஜ் டேஸ், காஞ்சி, டியான், ஆகிய தரமான படங்களைத் தந்த ஜி.என்.கிருஷ்ணகுமார் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
இப்படத்தில் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸாக நடிக்கிறார். படம் முழுதும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் என்பதால் பார்வையாளரை படம் தன் வசப்படுத்திக் கொள்ளும் விதமாக கதை திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம்.
இவை போன்ற திரில்லர் படங்களுக்கு இசையின் பங்களிப்பு மிக முக்கியம். அதை இப்படத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு வெகு சிறப்பாக செய்து வருகிறார் இசை அமைப்பாளர் ரோனி ராப்பில்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படம் தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜெபக்கின் 14-வது தயாரிப்பாகும்.
