தயாரிப்பு: டிரீம் வாரியார் பிக்சர்ஸ். கதை,வசனம் இயக்கம் :செல்வராகவன். இசை :யுவன் சங்கர் ராஜா. ஒளிப்பதிவு :சிவகுமார் விஜய்.
சூர்யா,சாய்பல்லவி, ரகுல் பிரீத் சிங், பொன்வண்ணன், இளவரசு,நிழல்கள் ரவி.
******************
அவைத்தலைவர் அவர்களே, மற்றும் மேடையில் அமர்ந்திருக்கும் வட்ட,மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளே! ஓரம் சாரங்களில் ஒதுங்கி நின்று முக்காடு போட்டுக் கொண்டு என்ன பேசுகிறேன் என்பதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிக்காரர்களே.!
முழிக்காதீங்க அய்யா சாரே அம்மா மேடமே.! ஒரு அரசியல் படத்தை விமர்சிக்கனும்னா ,அதுவும் செல்வராகவன் படத்தை ஆராயனும்னா இப்படியெல்லாம் ரூட்டு விட்டுக்கனும்.!
என்.ஜி.கே.ன்னா நந்த கோபாலன் குமரன்னு அர்த்தம்..
எம்.ஜி.ஆர்.எப்படியோ ,அப்படித்தான் இந்த என்ஜிகேயும்.!
எம்.ஜி.ஆர் .இல்லேன்னா அந்த பார்ட்டி அவுட்.! அந்த மாதிரிதான் இங்க சூர்யா இல்லேன்னா எல்லாமே அவுட்.! உலகத்தை தோளில் சுமந்த ஹெர்குலீஸ் மாதிரி கதையை சுமக்கிறார் சூர்யா.( கைதட்டல்.)
பட்டதாரி இளம்தாரி. இயற்கை விவசாயத்தில ஆர்வம். ஊருக்குள்ள ஒரு பிரச்னைன்னா என்னான்னு தட்டிக் கேட்கிற தைரியம் உள்ள ஆளு. இயற்கை விவசாயம்னு கிளம்பி நம்ம பொழப்ப கெடுக்கிறானே..கொளுத்துடா அவனோட வயலைன்னு உரக்கம்பெனி ஆளுங்க வச்ச தீ சூர்யாவை அரசியலுக்கு கொண்டுபோய் சேர்க்குது.
இனிதாண்டா ஆரம்பம் என் ஜி கே.யின் அரசியல் ஆட்டம். ! (கைதட்டல்.)
லோக்கல் எம்.எல்.ஏ .இளவரசிடம் தொண்டரடிப் பொடியா சேர்ந்து அப்படியே படிப்படியா உயர்ந்து சி.எம்.மூக்கிலேயே கோலாட்டக்குச்சிய விட்டு ஆட்டுறார் நம்ம என்ஜிகே.!
அரசியல் படம்னா மோடி மஸ்தான் வேலை காட்டுறதுன்னு செல்வராகவன் நினைச்சிட்டாரோ என்னவோன்னு நிறைய சீன் நினைக்க வைக்குது. ரெண்டு வருஷ கேப்பில டைரக்டர் என்னதான் யோசிச்சார்னு தெரியல மக்களே! ( விசில் சத்தம்.)
காணாமப் போனது தோழர் முகிலன் மட்டுமில்ல தோழர்களே.. .லாஜிக்கும்தான்! தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடியாதபடி அரசாங்கம் மட்டுமா திணறுது நம்ம திரைக் கதையும்தான்!
அரசியல் கட்சிகளுக்கு ஐடியா தானம் பண்ற ரகுல்பிரீத் சிங்கிடம் நம்ம சூர்யா பணிஞ்சு குனிஞ்சு டயலாக் பேசுவார் பாருங்க…ஒத்த இடம்னாலும் மொத்த கொட்டகையும் அதிருது மக்களே.!
சூர்யாவின் மனைவியா வருவது சாய் பல்லவி. நம்ம ஆளு சூர்யாவை ரகுல்பிரீத் தட்டிட்டுப் போயிடுவாரோங்கிற பயம் மனைவிகளுக்கே வர்றதுதானே.
நாட்டு நடப்புகளை தைரியமா சொல்றதுக்கு தில் வேணும். அது கொஞ்சம் இருக்கு. இப்ப இருக்கிற மந்திரிகளை நினைவு படுத்துறாங்க.
நீங்க நம்ம சூர்யாவுக்கு ஓட்டுப் போட்டால் தியேட்டர் அதிபர்கள் ,விநியோகஸ்தர்கள் குடும்பம் நல்லாருக்கும். அவர் சினிமாவுக்கு சிறப்பா சேவை செய்றவர் என்று கூறி விடை பெறுகிறேன்.
வணக்கம்.!”
சினிமா முரசம் மார்க் 2.5 / 5