ப்ளசிங் எண்டர்டெயினர்ஸ் சார்வில், பிரபாதீஸ் சாமுவேல் தயாரித்து வரும் ‘புத்தன் இயேசு காந்தி’ படத்தில் புலனாய்வுப் பத்திரிகையாளராக வசுந்தரா நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் சென்னை நகருக்குள் மிகவும் வேகமாக கார் ஓட்டும் காட்சியில் வசுந்தரா நடித்திருக்கிறார். மேலும், பரபரப்பான நிருபர் கதாபாத்திரத்துக்கு துணிச்சலாக பைக் ஓட்டும் காட்சிகளும் படத்தில் வருகிறது.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிஷோர், அசோக், மதுமிதா, கயல் வின்சென்ட், கல்லூரி அகில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
ஒளிப்பதிவு- விஜய் ஆம்ஸ்ட்ராங் .
இசை- வேத்சங்கர். ( இவர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ ‘மதுபானக்கடை’ ,’மூன்றாம் உலகப்போர்’படங்களின் இசையமைப்பாளர்)