கதை வசனம் , இயக்கம் : ஏஎல்.விஜய்,இசை :கோபி சந்தர்,சாம்.சி.எஸ்.
பிரபு தேவா,தமன்னா,கோவை சரளா,ஆர்.ஜே.பாலாஜி,நந்திதா டிம்பிள்,நந்திதாஸ் ஸ்வேதா..
**************************
” ஏன்னா…என்ன சொல்லி அழைச்சிண்டு போனேள்? காமடி ஹாரர் ப்லிம். ரொம்ப நன்னாருக்கும் .என்ஜாய் பண்ணலாம்டின்னு நாக்கில தேன் தடவினேளே…?”
“ஏண்டி..நானென்ன சோழி உருட்டி சோஷியமாடி பாக்க முடியும். நாலு பேரு சொன்னாளேன்னு நானும் சொன்னேன். இப்படி நோக்கும் பேய் பிடிக்கும்னு கனாவா கண்டேன்.? செலவில்லாம மொரிஷியஸ் ஐலாண்ட சுத்திப் பாத்தில்ல. அது போறும்டி!”
“என்னன்னா சொல்றேள்? சீனரி பாக்கவா கூட்டிண்டு போனேள்? தமன்னா கிளாமரா இருப்பா. பிரபுதேவா சூப்பரா ஆடுவார்,கோவை சரளா,காமடில பின்னிடுவா…நன்னா பொழுது போகும்னேளா இல்லியா…அவா கிளாமர இன்னிக்கி நேத்தா பாக்கிறோம்.தேவா டான்ஸ் நன்னாருக்கும்னு நீர் சொல்லித்தான் நேக்கு தெரியணுமாக்கும்? சரளா போட்ட மொட்ட பிளேடுல ரத்தக்காயம் செமத்தியா இருந்ததே.!”
“மரமண்ட.!தேவா உடம்பில டபிள் ஆம்பள பேய் கனெக்ட் ஆச்சே..கதைல அதாண்டி மெயின் அட்ராக்ஷன்.”
“பேத்தாதேள்? நடு மண்டைல சுத்தியல்ல பெரும் போடா போட்டு ஷேவ் நேசமணி ஹாஸ்டாக்ல இன்ஸ்ட்ராகிராம் போட்டோவா போட்ருவேன். போங்கோ மொட்ட மாடில சூப்பரா காத்து வரது.தூங்குங்க. ராப்பட்டினி!”