நடிகைகள் பல விஷயங்களில் படு ஓப்பனாக இருக்கிறார்கள்.
மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.
கடந்த கால வாழ்க்கையில் நடந்து விட்ட நல்லது கெட்டதுகளை வெளியில் சொல்வதற்கு சிலர் தயங்குவதில்லை.
கத்ரினாகைப் தனது கடந்த கால ‘தொடர்புகளை’ சுயபரிசோதனை செய்ததாக வைத்துக் கொள்ளலாம். அவைகளிலி இருந்து பாடம் கற்றுக்கொள்ளலாமே என்கிறார்.
ஆனால் இரண்டாண்டுகால ரன்பீர் கபீருடனான உறவு பற்றி சொல்ல மட்டும் தவிர்த்து விடுகிறார்.
இவரது ஜிம் நண்பி ஜான்வி கபூர். ஸ்ரீ தேவியின் மகள். இவர் ஜிம்முக்கு போட்டு வரும் டிரஸ்தான் கத்ரினாவுக்கு பிடிக்கவில்லை.
“இப்படியெல்லாம் மிக மிக குட்டையான டிரஸ் போட்டுக் கொண்டு வராதே என்பது இவரது அட்வைஸ்.
ஆனால் ஜான்வி கேட்பதில்லை. அதன் மூலம் கிடைக்கும் விளம்பரம் பத்து படத்தில் நடித்தால் கூட கிடைக்காதே… இன்ஸ்ட்ராகிராமில் அள்ளுமே !