பா.ரஞ்சித்தின் பயம் நியாயமானதுதானா?
பலத்த மெஜாரிட்டியுடன் மோடி வெற்றி பெற்றிருப்பது இந்திய ஒருமைப்பாடு,மதச்சார்ப்பின்மைக்கு கேடாக விளையுமா என்கிற அச்சம் இந்தியனுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதைத்தான் இயக்குநர் பா.ரஞ்சித் வெளிப்படையாக சொல்லிவிட்டார்.
“திமுகவின் வெற்றியினால் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது. ஆனாலும் மற்ற வேட்பாளர்களை விட திருமா சொற்ப வோட்டுகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்று இருக்கிறார்.
முற்போக்கு எண்ணம் கொண்ட அமைப்புகள் இது பற்றி மனம் திறந்து விவாதிக்க வேண்டும்” என்று வலியுறுத்திய ரஞ்சித் “இரண்டாவது முறையாக மோடி வெற்றி பெற்றிருப்பது பயத்தைத் தருகிறது” என்றார்.