காஞ்சனா முதல் பாகத்தை இந்தியில் லட்சுமி பாம் என்கிற பெயரில் ரீமேக் செய்ய முடிவு செய்து இயக்குநராக லாரன்ஸ் மாஸ்டரை நியமித்தார்கள்.
ஆனால் லாரன்சை கேட்காமலேயே படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டு விட்டார்கள்.
எடுப்பது காமடிப் படமா பேய் படமா எப்படி என்னுடைய அனுமதி இல்லாமல் போஸ்டர் போடலாம் இது எனது சுயமரியாதையை பாதிக்கிறது என்று சொல்லி லாரன்ஸ் அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார்.
பஞ்சாயத்து நடந்தது.
மும்பையில் இருந்து தயாரிப்புத் தரப்பில் இருந்து சிலர் வந்தார்கள்.
லாரன்சுடன் பேச்சு நடத்தி வெள்ளைக்கொடி காட்டவே தற்போது மாஸ்டர் சமாதானமாகி விட்டார். அக்ஷய் குமாருடன் விரைவில் படப்பிடிப்புத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.