மக்களவைத்தேர்தலில் கடுமையானத் தோல்வியை சந்தித்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ்.
பெங்களூரூவில் போட்டியிட்டு டிபாசிட் இழந்தார். மோடியை கடுமையாக விமர்சித்து வந்த தென்னக நடிகர்களில் இவர் முக்கியமானவர்.
ஒரு தனியார் தொலைக் காட்சியில் இன்று இரவு ஒளிபரப்பாகிய பதிவு செய்யப்பட்ட பேட்டியில் பல கருத்துகளை சொல்லியிருக்கிறார். தொகுத்து தந்திருக்கிறோம்.
“நான் தோல்வியடைந்தேன் என்று சொல்ல முடியாது. தேர்ந்தெடுக்கப்படவில்லை.அவ்வளவுதான்!
வெற்றி -தோல்வி என்று இதை பார்க்க முடியாது. தேர்ந்தேடுக்கப்படாததால் நான் அப்படியே ஒதுங்கி விடப்போவதில்லை.
இதையெல்லாம் செய்வேன் என்று சொல்லித்தானே தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்.அதையெல்லாம் செய்யுங்கள். என்று கேட்பேன்.. செய்யவில்லை என்றால் என் செய்யவில்லை என்று கேட்பேன்! செய்ய வைப்பேன்.ஓடி விட மாட்டேன்”
மோடியை நான் குற்றம் சாட்டியதே அவர் சொன்னதை யெல்லாம் செய்யவில்லை என்பதால்தானே! கோடிக்கணக்கில் வேலை வாய்ப்பு விவசாயப்பாதுகாப்பு என்றெல்லாம் சொன்னார் எதுவுமே செய்யவில்லையே அதனால்தானே அவரை கேள்விகள் கேட்டேன். இன்னமும் கேட்பேன்.ஒதுங்கி விடமாட்டேன்..
இந்த பாபா ராம் தேவ் என்கிற ஆள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே மூன்று பிள்ளைகள் பெற்றவர்களுக்கு ஓட்டுரிமை கொடுக்கக்கூடாது என்று பேசுகிறார் என்னங்க இதெல்லாம்!
அந்தந்த மாநிலங்களை அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களே ஆள வேண்டும் என்று சொன்னது வெறி அல்ல.! உணர்வு!
ரசிகர்மன்றங்களை நம்பி அரசியல் பண்ண முடியாது என்பது எனது கருத்து.அதனால் நான் அவ்வளவாக மன்றங்கள் மீது ஈடுபாடு காட்டவில்லை.
தமிழ்நாடு என்னை வாழவைத்த நாடு.இந்தமாநிலத்தில் மக்களுக்கு தவறுகள் நடக்கிறது என்றால் தட்டி கேட்பேன்.என் முதல் மனைவி லதா தமிழ்ப் பெண். என்னுடைய இரண்டு மகள்களும் தமிழ்ப்பெண்கள்.அதனால் நானும் தமிழன்தான்!”என்கிறார் பிரகாஷ்ராஜ்.