திராவிட தேசத்தின் தலைமைத் தளபதி
“கலைந்து போன கனவாக இருந்தாலும் திராவிட தேசத்திற்கான காரண காரியங்கள் அப்படியேதான் இருக்கின்றன “என சொன்ன பேரறிஞர் பெருந்தகையின் செல்லத்தம்பி.
முன்னைப் போல தமிழ் இல்லை.
ஆதிக்கம் செலுத்த செத்தொழிந்த மொழியின் தலை தெரிகிறது புதைகுழியில் இருந்து!
இலக்கியம் வளரவில்லை.
செழுந்தமிழின் பெருமை குறித்த ஆய்வுகள் இல்லை.
அதிகாரத் திமிர்,ஆணவம்,இவற்றைத் தட்டிக்கேட்கும் ஆண்மை அருகிவிட்டது.
நாட்டை சூழ்ந்த அவசரகால நெருக்கடியிலும் உன் மீது கை வைக்க சர்வாதிகாரமே அஞ்சியது.
அருந்தமிழே! வாழ்க உன் புகழ் !
–தேவிமணி