குடிதண்ணீர் பிரச்னை!
மக்களின் உயிர் பிரச்னை.!
கிராமம் கிராமமாக மக்கள் ,போராடி வருகிறார்கள்.
பா.ஜ.க.ஆள்கிற குஜராத்தில் தொகுதி எம்.எல்.ஏ. பலராம் தவானி என்பவரின் கட்சி ஆபீசுக்கு ஒரு பெண் சென்று குடிதண்ணீர் பிரச்னை பற்றி பேசி இருக்கிறார்.
அந்த பெண்ணை அலுவலகத்தில் இருந்த ஒருவர் அடித்து வெளியில் தள்ளியதும் பாய்ந்து வந்த பலராம் எம்.எல்.ஏஅந்த பெண் மீது கும் கும் என குத்துகள் விட்டு கீழே தள்ளி மிதித்து இருக்கிறார். இந்த அடிதடி நிகழ்ச்சியை அப்படியே படம் பிடித்த ஒரு புண்ணியவான் இணைய தளத்தில் வெளியிட்டு விட்டார்.
வைரல் ஆகி விட்டது.
வேறு வழியின்றி அந்த எம்.எல்.ஏ. பத்திரிகையாளர்களை அழைத்து “சாரி”என்று சொல்லி விட்டார்.
பாரதத்தின் மகள் ஒருவளை துச்சாதனன் அடித்து உதைத்து அவமானப்படுத்தியதை பா.ஜ.க மேலிடம் கண்டு கொள்ளவேயில்லை. காங்.கட்சியை சேர்ந்த நீது திவானி என்கிற பெண் புகார் செய்திருக்கிறார். பாஜக.ஆளும் மாநிலத்தில் நீதி கிடைக்குமா என்ன?
ஆனால் நமது சாக்லேட் பாய் மாதவன் கொதித்துப் போய்விட்டார்.