100 கோடி பட்ஜெட். சூப்பர் கேமரா மேன் நீரவ்ஷா,இசை ஜி.வி.பிரகாஷ். பாடல்கள் கார்க்கி, பலமான பக்க பலம்தான். எல்லாவற்றையும் விட படத்துக்கான கதைதான் அசுர பலம். ஜெயலலிதாவின் கதை.
இயக்குபவர் ஏஎல்.விஜய்.
மற்றொரு பெண் இயக்குநரும் ஜெயலலிதாவின் கதையை படமாக்குகிறார். ஆக இருவருக்கும் பலத்த போட்டி .யார் வெல்லுவார் என்பது மக்கள் கையில் இருக்கிறது.
“ஜெயலலிதாவின் டீன் ஏஜ் பருவத்திலிருந்து அவர் அரசியலில் ஜெயித்த கதைவரை படமாக்க வேண்டியதாக இருக்கிறது. இதற்காக தமிழ் கற்றுக்கொடுக்க ஒருவரை நியமித்திருக்கிறோம். கங்கனா ஆர்வமுடன் இருக்கிறார். சதை போடும் முயற்சியில் இருக்கிறார் கங்கனா.” என்கிறார் ஏஎல்.விஜய்.
உடன்பிறவா சகோதரி சசிகலாவாக நடிக்கப்போவது சாய்பல்லவி என்பது உண்மையா? இதுவரை கங்கனா தவிர வேறு யாரையும் ஒப்பந்தம் செய்யவில்லையாம்.!