“உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல” என்கிற கவியரசு கண்ணதாசன் “கண்ணாலே பெண்ணை அன்று கண்டதும் பாவம்,கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டதும் பாவம் “என்கிறார்.
இதற்கெல்லாம் காரணம் யார்?
“கண்ணைப் படைத்துப் பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே”!
கடவுள் குளோஸ். !
நீதாண்டா என் காதலுக்கும் அதன் வீழ்தலுக்கும் காரணம்.! ஒரு ஆள் கிடைத்து விட்டான் பழி போடுவதற்கு!
அப்படித்தான் ஆகி விட்டதோ விஷ்ணு விஷால் கதையும்!
காதலித்து மணந்து கொண்ட ரஜினி இன்று முன்னாள் மனைவி!
அப்படியானால் அந்த மனைவியின் இடத்தை இனி நிரப்புவது யார்?
இந்தியாவின் புகழ் பெற்ற பாட்மிண்டன் பிளேயரா?
ஜ்வாலா கட்டா?
விஷ்ணு விஷாலின் நெருங்கிய பெண் தோழி.
இருவரும் நெருக்கமாக இருக்கும் படத்தைப் பார்த்த கிரிக்கெட் பிளேயர் அஷ்வினுக்கே சந்தேகம் வந்து விட்டது
“என்ன ப்ரோ பயோபிக்கா?”
நம்ம ஆளு விஷ்ணு சமாளிக்கிறார்.
எப்படியும் கல்யாணம் நடந்து விடும்,!