காதல்னா சும்மாவா…?
எத்தனை காதலிகளிடம் எப்படியெல்லாம் மிதி வாங்கிய நடிகர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?
“போய்யா வெளியே “என்று வெளியில் தள்ளி கதவை சாத்திய பிரபல நடிகை வாழ்ந்த தேசமய்யா!
படுக்கை ஓரமாக பக்குவமாக உட்கார்ந்து கொண்டு உசுப்பிய நடிகருக்கு ஓங்கி உதை விட்ட புண்ணிய பூமி சாமி!
இப்படி சொல்லிட்டே போனா பட்டியல்தான் நீளும் .
சங்கதிக்கு வருவோம்!
சித்தார்த் .நடிகர் பெயர். நம்ம ஆளு இல்ல. இந்தி ஆளு. சீரியல் பிரபலம்.
சுபுகி ஜோஷி. நடிகை.சேம் பிளட்!
காதலித்தார்கள். நிச்சயதார்த்தம் நடந்தது, இரண்டு பேரும் குடும்பம் நடத்தினார்கள்.
உனக்கு நான் எனக்கு நீ என்றாகிய பிறகு ஒன்னுமண்ணா வாழ்ந்தா யார் குடியும் முழுகப் போறதில்ல.
ரெண்டு பேரையும் இந்தி பிக் பாஸ்க்கு கூப்பிட்டாங்க. சுபுகிக்கு ஒகே.!
சித்தார்த் “மாட்டேன். அங்க வந்தும் சண்டை போடுறதுக்கா?முடியாதுங்க “என்று மறுத்திட்டார்.
விசாரித்தால் இரண்டு மாதத்துக்கு முன்னாடிதான் அந்த வீட்டிலிருந்து சித்தார்த் வெளியேறி இருக்கார்.
“பிரச்னை பண்றா சார். பணபிரச்னைன்னு சண்டை போடுறா! நான் அவளுக்கு முதல் காதலன். ஆனா அவளுக்கு நான் ஆறாவது ஆள்.ஆம்பளைய கை நீட்டி அடிக்கிறது என்ன பழக்கம். கழுத்தை நெரிச்சி மூக்கில குத்தி ..அன்னிக்கி வெளி ஏறினவன்தான். போதும் சாமி.” என்கிறார் சித்தார்த்.