இவ்வளவும் நாளும் யாரும் மீ டூ பற்றி எதுவும் சொல்லாத நிலையில் ஒரு துணை நடிகை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் குண்டு போட்டிருக்கிறார்.
கோலிவுட்டில் கொஞ்சம் பதறித்தான் போயிருக்கிறார்கள்.
உண்மையோ பொய்யோ மக்களிடம் கெட்ட பேர்தானே !
சீதை தீ குளிச்சா!.
ஆனாஆம்பள கந்து வட்டிக்குப் பயந்துதான் தீ குளிக்கணும் இல்லேன்னா தூக்குப்போட்டுக்கணும். அதான் ஜீவி போன்ற பெரிய முன்னோடிகள் கதை இருக்கே.!
ஷாலு ஷாமு.துணை நடிகைதான். மிஸ்டர் லோக்கல் படத்திலும் நடித்திருக்கிறார்.
இவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் கேள்வி.
“மீ டூ வில் பாதிக்கப்பட்ட ஆளா நீங்க? அதிகமான படங்களில் பார்க்க முடியலியே “ன்னு கேள்வி.
“அப்படி பாதிக்கப்பட்டு நான் புகார் செய்திருந்தா என்ன ஆகியிருக்கும்? அதனால என்ன பிரயோசனம்?நான் வளர்ந்து வருகிற நடிகை. நான் புகார் சொல்ற ஆளு உண்மைதான்னு ஒத்துக்குவானா?( நியாயமான கேள்வி.) பைத்தியக்கார உலகம்!
இப்ப சமீபத்தில ஒரு படத்தில நடிக்கிறதுக்கு சான்ஸ் கேட்டா அந்த பிரபல டைரக்டருடன் படுக்கிறியான்னு கேட்கிறாங்க. விஜய தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கிற படம்” என்பதுடன் துணை நடிகை நிறுத்திவிட்டார்.
அந்த காமாந்தகன் பெயரை சொன்னாத்தானே உண்மை வெளிவரும்? போகிற போக்கில மண்ணை வாரி போடுற கதையாக இருக்கக்கூடாதுல்ல!