இது ரொம்பவும் ரிஸ்க் .
இவ்வளவு தாழ்வாக ஹெலிகாப்டர் பறக்கிறபோது நிலத்தில் உள்ள மொத்த தூசும் கனமாக பறக்கும்.தரையில் பைக் ஓட்டுவதும் சிரமம்.தள்ளாட வைக்கும்.
இத்தகைய நிலையில்தான் அக்சய் குமார் ஹெலியில் தொங்குகிறார்.இயக்குநர் ரோகித் ஷெட்டி பைக் ஓட்டுகிறார்.இந்த படத்தை தனது டிவிட்டரில் வெளியிட்டு யாரும் இதை மாதிரி டிரை பண்ண வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கோரிக்கையும் வைத்திருக்கிறார்.படத்தின் பெயர் சூர்யவன்ஷி.