“தன்னோட பாடி கார்டுக்கு பளார் விட்டாராமே சல்மான்கான். ஏன் சார் “என்கிற கேள்விதான் பாலிவுட்டில்!
அவர் அறை விட்டது சரியா தப்பா என்பது பற்றி பட்டி மன்றம் நடத்தாத குறைதான்!
ஆனால் எல்லோரும் பாராட்டவே செய்கிறார்கள்.!
அப்படி என்னதான் நடந்தது?
பாரத் படத்தின் பிரீமியர் ஷோ. சல்மானின் படமாச்சே. ரசிகர்களின் கூட்டம் நெருக்கித் தள்ளுது.
பாதுகாப்பாக சல்மானை கூட்டிக்கொண்டு போவது பாடி கார்ட்சின் கடமைதான்.
அதுக்காக சிறுவர்களிடம் அவர்களது முஷ்டி பலத்தைக் காட்டக்கூடாதுல்ல!
ஒரு பயில்வான் அப்படி பலம் காட்டியதைக் காண சகியாமல்தான் சல்மான் அறை விட்டிருக்கிறார்.
“சிறுவர்களிடமும் முதியவர்களிடமும் உங்களின் புஜபல பராக்கிரமத்தைக் காட்டாதீர்கள்”என்று புறப்படும் போதே எச்சரித்திருந்தும் அப்படி நடந்தால் கோபம் வருமா வராதா?
அதன் அந்த பளார் அறை!