“புதிய அணி பற்றி நாளை காலையில் (8 -ம் தேதி.)பேசப் போகிறோம். நான் தலைவர் பதவியில் நிற்பதற்காக இன்று மாலையில்தான் கையெழுத்துப் போட்டேன்” என்றார் பாக்யராஜ்.
காலையில் இருந்து அவரை தொடர்பு கொள்ள முயன்றோம். மாலையில் தான் அவரை தொடர்பு கொள்ள முடிந்தது.
“இப்பத்தான் கையெழுத்துப் போட்டேன்.எல்லா வேலையும் முடிஞ்சிருச்சி .எங்கள் அணி பற்றிய விவரங்கள் பற்றி நாளை காலையில் உட்கார்ந்து பேசுறோம்.”என்றார் .
இதற்கு முன்னதாக ஐசரி கணேஷ் தலைமையில் ஒரு குழு முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் செயலாளர் ராதாரவி ஆகியோரை சந்தித்து பேசியது.
“தமிழ் நடிகர் சங்கமாக்குங்க “என சொல்லிக் கொண்டிருக்கிற பாரதிராஜாவும் பாக்யராஜ் அணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.