எஸ்.டி.ஆரின் ரசிகர்கள் வெகு ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது ‘மாநாடு’தான்.!
இவரது ரசிகர்களிடம் பத்தினித் தன்மை அதிகம் கண்ணகி மாதிரி.! எஸ்டிஆரை குறை சொன்னால் பின்னி எடுத்து விடுவார்கள்.
ஈழத் தமிழர்களுக்காக இன்று வரை உதவுகிறவர்கள். அது சிம்பு கற்றுக்கொடுத்தது.
இதெல்லாம் சேர்ந்த அரசியல் கலவையாக வர விருப்பது மாநாடு.
சுரேஷ் காமாட்சி தயாரிக்கவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனி நடிக்கிறார். ஏகாம்பரம் கேமரா, யுவன் இசை.
இவ்வளவு காலமும் படப்பிடிப்புத் தொடங்காததற்கு காரணம் உடல் குறைப்புக்காக சிம்பு மேற்கொண்ட வெளிநாட்டு பயிற்சி.
தற்போது மலேசியா செல்வதற்கான விசா கிடைத்து விட்டதால் வருகிற 25 -ம் தேதி மாநாடு படக்குழு வெளிநாடு செல்கிறது.