நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம் ,
இன்னொரு பக்கம் வடிவேலு விவகாரம்.!
இவை போக சில்லறை சில்லரையாக பிரச்னைகள்.
இன்றைய கோலிவுட்டின் ரத்ன சுருக்கம்.
புதை குழிக்குள் போய்விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிற புலிகேசி விவகாரம் “அப்படியெல்லாம் இல்லை கோரைப்பல்லும் கொடுமையான நகங்களும் அப்படியே இருக்கின்றன” என உறுமிக் கொண்டு மிரட்டுகிறது.
ஷங்கரையே ஆட்டுவித்த வடிவேலு டைரக்டர் சிம்புதேவனையும் “அவன் இவன்” என்றும்”நடிக்கத்தெரியாத ஆள் “என்றும் தரக்குறைவாக பேசி பேட்டி கொடுத்திருந்தார்.
இதனால் தயாரிப்பாளர் டி.சிவா கடுமையாக வடிவேலுவைக் கண்டித்திருக்கிறார்.
“தொழிலுக்கு துரோகம் செய்தவர் வடிவேலு. தரக்குறைவாக டைரக்டரை பேசி இருக்கிறார். இது தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுக்கப்பட்ட பதினாறு பக்க புகாரை வெளியிட்டால் வடிவேலு மீதான மக்களுக்குள்ள மரியாதை குறைந்து போகும்” என்று எச்சரித்திருக்கிறார்.