“சுட்டுப் பிடிக்க உத்தரவு’
மிஸ்கின், இயக்குநர் சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யாரவி, மகிமா,பேபி மானஸ்வி ஆகியோர் நடித்திருக்கிற படம்.
ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி இருக்கிற திரில்லர் மூவி.
இந்த படத்துக்கான புரமோசன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
மேடையின் பின்புறம் பெரிய பேனர் வைத்திருந்தார்கள். அதில் மிஸ்கின் முகத்தை விட தேசத் தந்தை காந்தியின் முகத்தை சற்றே சிறிதாக வரைந்திருந்தனர்.
இருட்டிலும் கறுப்புக் கண்ணாடி அணியும் மிஸ்கின் கண்ணில் அது பட்டு விட்டது.
“காந்தி மிகப் பெரிய மகான். அவரைப் போன்ற மகான் இன்றில்லை.அதான் இவ்வளவு குழப்பமும். அவர் படத்தை சிறிதாக்கி என் படத்தை பெரிதாகப் போட்டிருக்கிறீர்கள். வருத்தமாக இருக்கிறது..அந்த தவறை மீண்டும் செய்யாதீர்கள்”என்று கேட்டுக் கொண்டார்.