“ரோஜாமலரே ராஜகுமாரி,ஆசைக்கிளியே அழகிய ராணி,” என்று நடிகை ரோஜாவை நகரித் தொகுதி மட்டுமின்றி ஒய் எஸ் ஆர் கட்சியே உச்சி முகர்ந்தது.
பட்டா போட்டுக் கொண்டு வாழ்ந்த சந்திரபாபு நாயுடுவை சுத்தமாக ஓரம் கட்டியது ஒய்.எஸ்.ஆர். பார்ட்டி!
அவர்கள் அமைக்கும் அமைச்சரவையில் ரோஜாவுக்கு நிச்சயம் அமைச்சர் பதவி உறுதி என்று நாடே நம்பியது. பதவியேற்புக்கான பட்டுப்புடவைகள் என பளபளப்பானார் ரோஜா.
ஆனால் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.அல்லவா!
பட்டியலில் ரோசஸ் பெயர் இல்லை.
வாடிப்போனார்.ரோஜா. அவரது போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டது. யாரையும் சந்திக்கவில்லை.
“நான் எப்போதுமே எனது சொந்த சாதியான ரெட்டி பிரிவை சார்ந்து இருக்கவில்ல.எனது திருமணமே அதற்கு சாட்சி.எனது உதவியாளர்கள் பல சாதிகளை சேர்ந்தவர்கள்.எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று சொன்னார்கள் தற்போது நியமனப் பதவி கிடைக்கும் என்கிறார்கள் பத்திரிகையாளர்கள். நடக்கும்போது பார்க்கலாம்.”
ஜெகன் மோகன் ரெட்டியை சந்திப்பாரா ரோஜா?
“அழைத்தால் போய் சந்தித்துப் பேசுவேன்” என்கிறார்