இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் குடும்பம் தமிழ்த்திரை உலகில் ஒரு நல்ல இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அடுத்தவரின் இடத்தைப் பிடுங்காமல் தனக்கென இரு தனி இடத்தைப் பிடித்து வைத்திருப்பது ஆரோக்கியம்.
தற்போது ஏ.ஆர் ரகுமான்,அவரது சகோதரி ஏஆர் ரஹைனா ,இவரது மகன் ஜி.வி.பிரகாஷ், தற்போது இவரது சகோதரி பவானி ஸ்ரீ, ரகுமானின் மகன் ஏ எச்.ஹசீப் ஜி,வி ,பிரகாஷின் மனைவி பாடகி சைந்தவி, ஆகியோர்தான் தமிழ்ச்சினிமாவில் பெரிய குடும்பமாக இருக்கிறார்கள்.
மக்கள் செல்வன் விஜயசேதுபதி நடிக்கும் க.பே .ரணசிங்கம் என்கிற படத்தில் பவானி ஸ்ரீ முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வரியா ராஜேஷ் நாயகனுக்கு இணையாக நடிப்பார் என தெரிகிறது.