உலகநாயகன்,சூப்பர் ஸ்டார் இருவருமே தமிழ்ச் சினிமாவுக்குப் பொதுவானவர்கள்.
பொக்கிஷங்கள்.
அவர்களது அரசியல் கருத்துகள் அவரவர் தொடர்புள்ளது.
கருத்துச்சொல்ல உரிமை இருக்கிறது.
திரைத்துறை சார்ந்த பிரச்னைகள் என வந்தபோது அவரவர் கருத்துப்படி நின்றார்கள்.
அதைப்போல நடக்கவிருக்கும் தென்னிந்திய நடிகர்சங்கத்தேர்தலில் கருத்துச்சொல்லலாம்.
ஆனால் “நான் வந்தால் நல்லா இருக்கும்,என்று ரஜினி சொன்னார்”என்று அடுத்தவர் வாயினால் சொல்ல வைப்பது சூப்பர் ஸ்டாருக்கு அழகல்ல.
“ஆமா நான்தான்யா அப்படிச்சொன்னேன்.இப்ப அதுக்கு என்னங்கறே?” -இப்படி பகிரங்கமாக உரத்துக்குரல் கொடுப்பதுதான் அவரது தகுதிக்கு நல்லது.
அல்லது “நான் அப்படி சொல்லவில்லை எல்லோரையும் வாழ்த்துவதைப் போல பாக்யராஜையும் வாழ்த்தினேன்”என சொல்லலாம்..
உலக நாயகன் கமல்ஹாசன் -நாசர் இருவரது நட்பு உலகம் அறிந்த உண்மை.
“நண்பர் நாசர் அவரை ஆதரிக்கிறேன் “என பகிரங்கமாக சொல்லலாம்.அதைவிடுத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு அந்த படத்துக்குப் பின்னால் பதுங்குவது நல்லதல்ல.!
ரஜினி,கமல் இருவரும் நடிகர் சங்கத் தேர்தலில் பகடைக்காய்களாக உருட்டப்படுவது நல்லதல்ல.