“உனக்கு என்னடியாத்தா ..கூந்தல் உள்ள சீமாட்டி அள்ளியும் முடிஞ்சிக்குவே ,அவுத்தும் விட்டுக்குவே!”
சாதாரணமாக முடி அதிகமாக உள்ள பெண்களைப்பார்த்து சற்று பொறாமையுடன் சக பெண்கள் புலம்பும் வார்த்தையாடல். ஆனால் இப்போது அரை அடி கூந்தலையே அவுத்து விட்டுக்கொண்டுதானே எல்லாப்பெண்களுமே அலைகிறார்கள்.
ஆனால் சொல்லப்போவது கூந்தல் மேட்டர்தான்.ஆனால் ஆண் நடிகரைப் பற்றி. அதுவும் தல அஜித்குமாரைப் பற்றி.!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அடுத்து நிறத்தில் ரோஜாப்பூவாக இருக்கிறார் அஜித். முழுக்க நரைத்த முடி. நினைத்த நேரத்தில் கேரக்டருக்கு தகுந்தபடி சாயம் பூசிக்கொள்ளலாம்.
புதிய படத்துக்காக கிரிக்கெட் உலக தல தோனி ஸ்டைலில் முடி வெட்டிக்கொண்டு கருப்புச்சாயம் பூசி இருக்கிறார்.அது தொப்பி வைத்த மாதிரி இருக்கிறது.
அடுத்த எச்.வினோத் படத்துக்கான முடி அலங்காரம் !