திருமண விவாகரத்துக்கு பின் மீண்டும் சினிமாவில் தனது முழுக்கவனத்தை திருப்பியுள்ள அமலாபால், ‘அதோ அந்த பறவைபோல’, ‘ஆடை’ மற்றும் மலையாளத்தில் ‘ஆடு ஜீவிதம்’,’பரானு பரானு’, ‘கேடவர்’ ஆகிய மூன்று படங்கள் என மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.
தற்போது இயக்குனர் எஸ். பி ஜனநாதனின் உதவியாளரான வெங்கட் கிருஷ்ணா ரோகாந்த் இயக்கும் புதிய படமொன்றில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தமாகியுள்ளார.
விஜய் சேதுபதியுடன், அமலாபால் இணைவது இதுவே முதல்முறை. இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கியுளளது .
இந்நிலையில், “எததனை நாளைக்கு இந்த தனிமை வாழ்க்கை”? என அமலாபாலின் பெற்றோர்கள் அமலாபாலை, மீண்டும் திருமணத்திற்கு வற்புறுத்தி வந்த நிலையில்,
தற்போது அவரின் உறவினர்களும் அமலாபாலை மீண்டும் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகுமாறு வற்புறுத்தி வருகிறார்களாம்.
அமலாபாலின் பெற்றோர்கள் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை மாப்பிள்ளையாக தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்தே உறவினர்கள் மூலம் அமலாபாலுக்கு ‘அட்வைஸ் நெருக்கடி’ என கூறப்படுகிறது.