தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாசர் தலைமையிலான ,விஷால்,கார்த்தி ஆகியோர் அடங்கிய பாண்டவர் அணியும், இவர்களை எதிர்த்து பாக்யராஜ் தலமையிலான ஐசரி கணேஷ், பிரசாந்த், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட நடிகர்கள் அடங்கிய சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகிறது.
இந்நிலையில், இத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று பாரதி பிரியன் உள்ளிட்ட 61 பேர் சங்கங்களின் பதிவாளரிடம் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் விதிமுறைகளை மீறி உறுப்பினர்களை நீக்கியது தொடர்பாக நடிகர் சங்கத்திற்கு மாவட்ட பதிவாளர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இதன் காரணமாக நடிகர் சங்க தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை நடிகர் கமல்ஹாசனை பாக்யராஜ் தலைமையிலானசுவாமி சங்கரதாஸ் அணியினர் சந்தித்து பேசினர்.
இதையடுத்து மாலையில்,நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர்அணியினர் சந்தித்து பேசினார்.
இரு அணியினரும் போட்டி போட்டுக்கொண்டு கமல்ஹாசனை சந்தித்து ஆதரவுகோரியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. மொத்தம் 68 பேர் போட்டியிடுகின்றனர்.
இதில் ரமேஷ் கண்ணா மற்றும் விமலின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடபட்டுள்ளது.
மொத்தம் 68 பேர் போட்டியிடுகின்றனர். இதில் நடிகர் ரமேஷ் கண்ணா மற்றும் விமலின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.