சொரணைiங்கிறது எதைக் கொண்டாவது அடிச்சாத்தான் வரும்கிறது தமிழ்ச்சினிமாக்காரங்களுக்கு ஆகிப் போச்சு. இங்க தமிழ் உணர்வு,இன உணர்வு,இதெல்லாம் துட்டுக்குத்தான் வரும். பேசுவாங்க வாய் கிழிய தமிழன் அந்த மலையில கொடி போட்டான்,இந்த தேசத்தில நட்டான்னு !
ஆனால் காரியம்னு வரும்போது வேற மொழிகளில்தான் பேரு ! குறிப்பா இங்கிலீஸ்ல.
கலைஞர் கருணாநிதி வரி விலக்குக் கொடுத்தார்னு பலபேருக்கு தமிழ் தெரிஞ்சது.
இப்ப மத்திய அரசாங்கமே அந்தந்த மாநில மொழிகளில்தான் சினிமா,சீரியல் பெயர் இருக்கணும்னு ஒரு அடி கொடுத்திருக்கு. தடித்த தோல் அடி வாங்கினால்தான் உணர்வு வரும்.
வரவேற்கிறோம்.