வெயிட்டிங் லிஸ்ட்ல இருந்த மாநாடு,முப்தி ரீ மேக் இரண்டுல முப்தி ரீமேக்படத்துக்கு ஆர்.ஏ.சி. கிடச்சு இப்ப பூஜைக்கு வந்திருக்கு.
கே.ஏ ஞானவேல் ராஜா தயாரிப்பு.எஸ்.டி.ஆர், கவுதம் கார்த்திக் இருவரும் நடிக்கிற படம். கர்நாடகாவில் பூஜை நடந்து விட்டது. முப்தி படத்தை இயக்கிய நரதனே படத்தை இயக்குகிறார்.
அந்த படத்துக்காக சாதாரணமாக வேட்டி கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் படத்தைப் பார்த்து விட்டு எஸ்.டி.ஆரின் பரம ரசிகர் மகேந்திரன் என்பவர் “தலைவா ! இப்படியெல்லாம் பண்ணாதீங்க.இந்த மாதிரி கெத்தா இருக்கிறதா பார்த்தா எதிரிங்க செத்திருவாங்க”என்று கமென்ட் அடித்திருக்கிறார்.
இன்னொரு செய்தி….சிம்பு வெளியிட்டுள்ள அப்பா நாள் செய்தி.
“விட்ருங்கப்பா!”
“அப்பா..! போராடனும் குரல் கொடுக்கணும் என்பதையெல்லாம் விட்ருங்கப்பா! ஒரு பொண்ணைக் கூட தொடாம நடிச்சிங்க. நான்தொட்டுத்தான் நடிக்கிறேன். எனக்குத்தான் கிளாப்ஸ்.
ஒரே மனைவியுடன் கட்டுப்பாடா வாழ்க்கையை நடத்துறீங்க. எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. தலையை இப்படி அப்படி சிலுப்புறீங்கன்னு கிண்டல் பண்றாங்க.இந்த வயசில அவருக்கு இவ்வளவு முடி இருக்கிறத பார்த்து மத்தவங்களுக்கு பொறாமையா இருக்கு,”என்று சிலம்பரசன் தனது தந்தை டி.ராஜேந்தர்க்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார்.