தமிழ்ச்சினிமாவில் தனக்கென தனித்த ரசிகர்களது சாம்ராஜ்யம் வைத்திருப்பவர்களில் சூரியா மிகவும் முக்கியமானவர்.
அவரது தந்தை சிவகுமாரோ ரசிகர் மன்றம் என்றாலே “விட்ருங்கய்யா!” என இரு கரம் கூப்புகிறவர். ஆனால் மாபெரும் ரசிகர் மன்றங்களை வைத்துக்கொண்டு அவைகளை நல்வழியில் பயணிக்க வைத்துக் கொண்டிருப்பவர் அவரது மகன் சூரியா.
இவரது அடுத்த படம் ‘சூரரை போற்று”
படத்தை இயக்குவது சுதா கொங்கரா.
கனரக ராணுவ வாகனங்களை தூக்கிச்செல்லும் பிரமாண்டமான விமானத்தை ஒரு இளைஞன் பார்க்கிறான். வேட்டி கட்டிய அந்த தமிழன் அண்ணாந்து பார்ப்பதிலிருந்து அவனின் வியப்பின் அளவு தெரிகிறது. வேட்டியை மடித்துக் கட்டவும் மறந்த நிலையில் இருக்கிற அந்த வாலிபன் அனேகமாக சூரியாவாக இருக்க முடியும்.
நமது கற்பனைதானே!
கதைக்களம் வித்தியாசமாக இருக்கும் என்பதை காயம் பட்ட சூரியாவின் முகம் காட்டுகிறது,
இந்த படத்தில் சூப்பர் ஸ்டாரின் நண்பரான மோகன்பாபு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார் நாயக நடிகர்.
“மோகன்பாபு சாருடன் நடிக்கப்போவதை நினைத்து மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.500 படங்கள் வரை நடித்திருக்கும் சிறப்புக்குரியவருடன் இணைவது பாக்கியம்.எங்களின் சூரரை போற்று வதற்கு உங்களையும் இணைத்துக் கொண்டோம் சார்” என மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்.