“என்னடா ஆச்சு..கொல்லையில போறவய்ங்களே! நேத்து வரை அவரு சி.எம்.டா.! குனிஞ்சி நின்னு கும்பிடு போட்ட பயலுக இன்னிக்கி பையைத் தடவி சோதனை போடுறாய்ங்க. இந்த மாதிரி ஒரு மனுசனை கேவலப்படுத்த சொன்னது எந்த உருவமடா” ன்னு கத்த தோணுதுங்க.”
ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவைத்தான் விமான நிலையங்களில் இப்படி சோதனை போடும்படி மத்திய அரசு சார்ந்த மகான்கள் உத்திரவு போட்டு இருக்கிறார்கள்.
பதவி இழந்த எல்லா மந்திரிகளையும் இப்படி சோதனை போட்டால் அவர்கள் ஆண் மக்களே!
மோடியை கடுமையாக எதிர்த்தவர் என்பதால் இப்படி சோதனை போடுவதா?
அவர் பதவி இழந்து விட்டதால் அவரும் சாமான்யர் தான். மறுக்கவில்லை.ஆனால் அவர் வகித்த பதவிக்கு ஒரு மரியாதை உண்டல்லவா!
“உயர்திணை என்பனார் மக்கட்சுட்டே” என்கிறது எமது தொல்காப்பியம்.
மனித வடிவமாக இருப்பவர்கள் எல்லோருமே மனிதர்கள் அல்லர்.
‘இவன்தான் மனிதன் என உதாரணம் சொல்லக் கூடியவனாக எவன் இருக்கிறானோ அவனே உயர்திணையான மனிதன்’ என பொருள் கொள்ள வேண்டும் .
சந்திரபாபு நாயுடு உதாரண மனிதர்தான். ஹைதராபாத் நகரை ஐ.டி.நகரமாக மாற்றியவர்..பத்து வருஷம் முதல் மந்திரி.
இவ்வளவு இழிவாக நடத்தப்பட்டும் மனிதர் பொங்கவில்லை.அது அவரது உயர் குணம்.!